இந்தியா

VIDEO: கால்வாயில் இருந்து மலைப்பாம்பை வெறும் கையால் பிடித்த வாலிபர்

Published On 2025-02-04 10:25 IST   |   Update On 2025-02-04 10:25:00 IST
  • ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார்.
  • பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.

நீர்நிலைகளையொட்டிய பகுதிகளில் மலைப்பாம்புகளை பார்த்தால் உடனடியாக பொது மக்கள் வன ஊழியர்கள் மற்றும் வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். உடனடியாக அவர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் கால்வாயில் இருந்து ஒரு ராட்சத மலைப்பாம்பை வாலிபர் ஒருவர் வெறும் கையால் அசால்ட்டாக பிடிக்கும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இன்ஸ்டாகிராமில் 'விஷால் ஸ்னேக் சேவர்' என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தரைப்பாலத்தின் மீது நிற்கிறார். பாலத்தின் கீழ் பகுதி வழியாக கால்வாய் செல்கிறது. அப்போது கால்வாயில் ராட்சத மலைப்பாம்பு செல்வதை கண்ட வாலிபர் பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் இறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.

பின்னர் ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார். தொடர்ந்து மலைப்பாம்பை வெறும் கையால் பிடித்து மேலே தூக்குகிறார். அந்த பாம்பு அதிக நீளம் கொண்ட ராட்சத பாம்பாக இருக்கிறது. பாம்பை அவர் மேலே தூக்கும் போது சீறுகிறது. எனினும் அவர் துணிச்சலாக அதனை கையாள்கிறார். இந்த வீடியோ 3.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.



Tags:    

Similar News