வாகன உதிரி பாகங்களால் கனவுவீடு கட்டிய வாலிபர்- வீடியோ
- ஆட்டோ மொபைல் மீதான ஆர்வத்தை காட்டுகிறது.
- கார் டயரில் இருந்து ஜன்னல்கள் உருவாக்கி வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அமைத்துள்ளார்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்பது கனவாக இருக்கும். அந்த வீட்டில் தங்களுக்கு பிடித்த பொருட்களை வைத்திருப்பார்கள். கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாகன உதிரி பாகங்களை பயன்படுத்தி தனது கனவு வீட்டை கட்டிய காட்சிகள் சமூக வலைதள பயனர்களை கவர்ந்துள்ளது.
வாகனங்கள் மீது அலாதி பிரியம் கொண்ட அவர் தனது வீட்டை தனித்துவமாக கட்ட முடிவு செய்தார். அதன்படி அம்பாசிடர் கார் பாகம் மூலம் ஷோபா உருவாக்கி உள்ளார். இதே போல கார் டயரில் இருந்து ஜன்னல்கள் உருவாக்கி வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அமைத்துள்ளார்.
இது அவரது ஆட்டோ மொபைல் மீதான ஆர்வத்தை காட்டுகிறது. மேலும் வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள மின் விளக்குகள் பஜாஜ் ஷேடக் வாகனத்தில் கைபிடியால் ஆனது என்று அந்த வாலிபர் கூறுகிறார். வீட்டில் இருக்கும் மேஜை பைக் என்ஜின் மூலமும் மற்றொரு ஷோபா பழைய ஸ்கூட்டரில் இருந்தும் உருவாக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இது தொடர்பாக அந்த வாலிபர் கூறுகையில், நான் ஜே.சி.பி. ஆபரேட்டராக இருந்தேன். எனது கனவு வீட்டை கட்டுவதற்காக சிறிதளவு பணம் இருந்தது. ஆனால் ஆட்டோ மொபைல் மீதான எனது காதல் தான் இந்த கனவு வீட்டை கட்ட தூண்டியது என்றார்.