இந்தியா
null

அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் சீனா

Published On 2024-09-19 04:08 GMT   |   Update On 2024-09-19 04:09 GMT
  • ஹெலிகாப்டர் தளம் சீனாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்கும் என கணிப்பு.
  • திபெத்தில் உள்ள பகுதியில் கட்டப்பட்டு வந்தாலும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என கருதப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்தியா- சீனா இடையே நீண்ட காலமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. கல்வாண் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டது மிகப்பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாட்டு வீரர்களும் தங்களுடைய எல்லைக்கு திரும்பினர். இருந்த போதிலும் அருணாச்சலம் எல்லை அருகே தங்களது இருப்புகளை அதிகரித்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் சீனா ஹெலிபாக்டர் தளம் அமைத்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள் படம் இதை தெளிவாக காட்டுகிறது.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் செயல்களுக்கான திறனை அதிகரிக்கும் இந்த ஹெலிகாப்டர் தளம் தொடர்பான விசயங்களை காண்காணித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் அண்டை நாடான திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள நியிஞ்சி மாகாணத்தில், கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் இந்த ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எந்த கட்டுமானமும் அங்கு இல்லை. அதே மாதம் 31-ந்தேதி எடுக்கப்பட்ட படத்தில் நிலம் க்ளின் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது.

கடந்த 16-ந்தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இந்த ஹெலிகாப்டர் தளத்தில் 600 மீட்டர் துாரத்திற்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு இது சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு மூன்று ஹேங்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News