இந்தியா

முதல்வர் முகமும் கிடையாது, டெல்லி குறித்த எந்த திட்டமும் கிடையாது: பா.ஜ.க.வுக்கு கெஜ்ரிவால் பதிலடி

Published On 2024-12-23 10:09 GMT   |   Update On 2024-12-23 10:09 GMT
  • நாட்டிலேயே டெல்லி அரசுதான் மிகவும் திறமையற்ற அரசாக திகழ்கிறது.
  • ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள். மந்திரிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்- பா.ஜ.க.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு 2100, முதியோருக்கு இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஊழல் குறித்து பா.ஜ.க. குற்றப்பத்திரிகை என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.-வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "பா.ஜ.க.-வுக்கு முதல்வர் முகமும் கிடையாது, டெல்லி குறித்த செயல்திட்டமும் (Agenda) கிடையாது. பா.ஜ.க.-வுக்கு தெரிந்த ஒரே விசயம், கெஜ்ரிவாலை எப்படி துஷ்பிரயோகம் செய்வது.

வீடுவீடாக சென்று மகிலா சம்மான் யோஜனாவுக்கான (Mahila Samman Yojana) ரிஜிஸ்டர் செய்யும் பணி தொடங்கப்பட்டள்ளது" என்றார்.

பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் தனது குற்றச்சாட்டில் "நாட்டிலேயே டெல்லி அரசுதான் மிகவும் திறமையற்ற அரசாக திகழ்கிறது. ஆம் ஆத்மி அனைவருக்கும் இலவச தண்ணீர் வழங்குவதாக சொன்னது. இன்று மக்கள் டேங்கர்களுக்கு ஆயிரம் கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். டெல்லியை காற்று மாசு இல்லாத நகரமாக மாற்றுவோம் எனச் சொன்னது. கொஞ்சம் காற்குமாசு குறியீட்டை பாருங்கள். ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள். மந்திரிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News