மோடியை இப்படி பேசுவியோ? மர்ம நபரை தட்டித்தூக்கிய போலீஸ்
- வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- இதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
நொய்டாவை அடுத்த ஹோஷியர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாத் யாதவ். இவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணை முடிவில் வீடியோ வெளியிட்டது ராம்பாத் யாதவ் என்று காவல் துறை கண்டுபிடித்தது. இதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ராம்பாத் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்பாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.
"பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ராம்பாத் யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் பேசி, வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. காவல் துறை இந்த வீடியோவை பார்த்து, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது," என்று காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.