உண்மை சரிபார்ப்பு பிரிவு மூலம் 1,575 செய்திகள் போலி என கண்டுபிடிப்பு: பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- 2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன.
- இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.
பிஐபி-யின் (Press Information Bureau) உண்மை கண்டறியும் பிரிவு கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 19ஆம் தேதி வரை போலி செய்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுதல் தொடர்பாக 1575 செய்திகளை கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அஷ்வினி விஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு 25,626 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 8,107 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 338 செய்திகள் போலியானது என கண்டறியப்பட்டது.
2023ஆம் அண்டு 20,684 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,623 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 557 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.
2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,320 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.
தற்போது மார்ச் 19ஆம் தேதி வரை 6,320 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன இதில் 1,811 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 97 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.