இந்தியா

பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு

Published On 2024-12-22 20:11 GMT   |   Update On 2024-12-22 20:11 GMT
  • பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நவ்யா ஹரிதாஸ், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:

பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவரது சொத்துகள் குறித்தும், குடும்ப சொத்துகள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது, ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது.

எனவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்துசெய்து, அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள ஐகோர்ட்டிற்கு இன்று முதல் ஜனவரி 5-ம் தேதி வரை விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சி, இது பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியல் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News