இந்தியா

உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்த பிரதமா் மோடி

ராமகுண்டம் யூரியா உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்தார் பிரதமா் மோடி

Published On 2022-11-12 18:23 IST   |   Update On 2022-11-12 18:23:00 IST
  • இன்று காலை ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்.
  • தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் யூரியா உரத் தொழிற்சாலையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

ஐதராபாத்:

பிரதமா் நரேந்திர மோடி தமிழகம், கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தென்மாநில சுற்றுப்பயணத்துக்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். கர்நாடகா, தமிழகம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை ஆந்திரா வந்தடைந்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய மந்திரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆந்திரா சுற்றுப்பயணம் முடித்து இன்று மதியம் தெலுங்கானா வந்தடைந்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத் தொழிற்சாலையை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், ரூ. 2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Tags:    

Similar News