இந்தியா
'சோலி கே பீச்சே' பாடலுக்கு நடனமாடிய மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மாமனார்
- நண்பர்கள் வற்புறுத்தியதால் 'சோலி கே பீச்சே..' என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடியுள்ளார்.
- மணமகனின் இந்த செயல் மணமகளின் தந்தைக்கு பிடிக்கவில்லை.
டெல்லியில் திருமணத்தின்போது 'சோலி கே பீச்சே..' என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு மணமகன் நடனமாடியதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள் வற்புறுத்தியதால் 'சோலி கே பீச்சே..' என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடியுள்ளார். மணமகனின் இந்த செயல் மணமகளின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து அவர் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மணமகன் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை. திருமணம் பாதியில் நின்றதால் மணமகள் கண்ணீருடன் அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
தனது குடும்ப மரபுகளை அவர் உதாசீனம் செய்துவிட்டதாக மணமகளின் தந்தை காட்டமாக தெரிவித்தார்.