தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு தள்ளுபடி
- 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
- அவரது தந்தை போலீசார் அதிகாரி என்பதால் பாதுகாப்பு விதிமுறையை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்.
கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள்.
கைது செய்யப்பட்ட அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஜாமின் கேட்டு ரன்யா ராவ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.