தெலுங்கானாவில் தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்
- 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
- ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.
மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.
இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.
ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.
தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர்.