யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு: அவசர தரையிறக்கம்
- ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
- உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.
இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.
ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.