இந்தியா

பள்ளி குழந்தைகளின் சுட்டி நடனம்- வைரலாகும் வீடியோ

Published On 2025-01-16 07:26 IST   |   Update On 2025-01-16 07:26:00 IST
  • பள்ளி பருவத்தை மாணவர்கள் சிலர் கொண்டாடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • ஒரு மாணவர் தேர்ந்த நடன கலைஞருக்கு நிகராக உடலை வளைத்து நெளித்து குத்தாட்டம் ஆடினான்.

பள்ளி பருவம் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்று. எவ்வித கவலைகளும் இன்றி இன்புற்று மகிழும் பருவமாக பள்ளி பருவம் உள்ளது. அத்தகைய பள்ளி பருவத்தை மாணவர்கள் சிலர் கொண்டாடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீடியோவில் பள்ளி விழாவில் நடனமாடுவதற்காக ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது மாணவர்கள் குழு ஒன்று மேடையில் இருந்தவாறு ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் நடித்த தேவரா படத்தின் 'சுட்டமல்லே' பாடலின் தெலுங்கு பதிப்புக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதில் ஒரு மாணவர் தேர்ந்த நடன கலைஞருக்கு நிகராக உடலை வளைத்து நெளித்து குத்தாட்டம் ஆடினான்.

இன்ஸ்டா கிராமில் வெளியான இந்த வீடியோவை ஜூனியர் என்.டி.ஆர். அனிருத் உள்ளிட்டவர்கள் பார்த்து ரசித்து விருப்பம் தெரிவித்துள்ளனர். 5 நாட்களில் 2½ கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் 35 லட்சம் விருப்பங்களை பெற்று காட்டுத்தீப்போல பரவி வருகிறது.



Tags:    

Similar News