இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.73 கோடி
- கெஜ்ரிவால் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து இருந்தார்.
- ரூ.1.70 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து இருந்தார்.
அதில் அவர் தனக்கு சொத்தாக ரூ.2.96 லட்சம் வங்கி சேமிப்பு மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கையிருப்பில் உள்ளதாகவும், ரூ.1.70 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அவருடைய மனைவி சுனிதாவுக்கு ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் குருகிராமில் ஒரு வீடு மற்றும் சிறிய கார் ஆகியவை அடங்கும்.