ஆண்டின் இறுதி நாளில் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆண்டின் இறுதி நாளான இன்று (டிசம்பர் 31-ந்தேதி) இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 78,248.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 262.56 புள்ளிகள் குறைந்து 77,982.57 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று குறைந்தப் பட்சமாக சென்செக்ஸ் 77,560.79 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,305.34 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் நிஃப்டி மிகப்பெரிய அளவில் உயர்வு மற்றும் சரிவு இல்லாமல் பாயிண்ட் 10 (.10) புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது.
இந்திய பங்குச் சந்தை நேற்று நிஃப்டி 23,644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,560.60 புள்ளிகளில் வர்த்தம் தொட்ங்கியது. குறைந்த பட்சமாக நிஃப்டி 23,460.45 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக நிஃப்டி 23,689.85 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக -.10 புள்ளிகள் குறைந்து 23,644.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மாசெயுட்டிகள், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டன.
டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டைடன் பங்குகள் சரிவை சந்தித்தன.