null
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி
- லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.
- விபத்தின்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். மேலும் சில கார்கள் அவரது காருடன் அணிவகுத்து சென்றன.
ஹூக்ளி புறநகரில் தேசிய நெடுஞ்சாலையில் தாதுபூர் என்ற பகுதியில் சென்றபோது கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வேகமாக வந்த லாரி ஒன்று கங்குலியின் கார் மீது மோதியது.
இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் பிரேக் போட்டார். இதில் கங்குலி காரை தொடர்ந்து வந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கங்குலி காயமின்றி உயிர் தப்பினார். அதேபோல் மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்தது என்றும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.