இந்தியா

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் "Smoking Area" - கொந்தளித்த நெட்டிசன்கள்

Published On 2025-01-10 12:00 IST   |   Update On 2025-01-10 12:00:00 IST
  • பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
  • பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தின் கேட் 07 அருகே உள்ள பாதுகாப்பு ஹோல்ட் பகுதிக்குள் புகைப்பிடிப்பவர்களுக்கான பகுதி சமீபத்தில் திறக்கப்பட்டது. இது இணையதள வாசிகளிடையே பேசும் பொருளாகி உள்ளது.

விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், உற்சாகமான செய்தி! விமான நிலையத்தின் கேட் 07 அருகே உள்ள பாதுகாப்பு ஹோல்ட் பகுதிக்குள் இன்று (06.01.2025) புகைபிடிப்பதற்கான பகுதி திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கான இடைவெளியில் திறக்கப்பட்ட பகுதியில் புகைப்பிடிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். புகைபிடிக்கும் மண்டலத்தை உருவாக்குவது புகைபிடிப்பதை ஊக்கப்படுத்துவதாகவும், பொது சுகாதார முயற்சிகளை குலைப்பதற்கான செய்தி என்றும் பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக புகைப்பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் என்றும், விதிமுறைகள் இன்னும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும், மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையம் புகை பிடிக்கும் பகுதி தொடர்பான எக்ஸ் தள பதிவை நீக்கியுள்ளது.




Tags:    

Similar News