இந்தியா

குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் வெளியேறும் காட்சி.


குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் விரிசல்- ஸ்கூட்டரில் வந்த பெண் படுகாயம்

Published On 2023-03-05 12:15 IST   |   Update On 2023-03-05 12:15:00 IST
  • குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது.
  • குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது.

மும்பை:

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.சி. கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற தண்ணீர் அலையின் கீழ் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டி வருவதும் பதிவாகி இருந்தது. மேலும் சாலையில் விரிசல் ஏற்பட்ட காட்சிகளும் அதில் உள்ளன.

குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது. மேலும் சாலை முழுவதும் கற்களும் சிதறி கிடந்தன.

இந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News