இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரிகளில் கழிப்பறை, நூலக வசதியை உறுதி செய்ய வேண்டும்- தமிழிசை உத்தரவு

Published On 2023-06-28 10:12 IST   |   Update On 2023-06-28 10:12:00 IST
  • மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதுமையை கொண்டு வர வேண்டும்.
  • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

திருப்பதி:

தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகையில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 3-வது மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டில் பல்கலைக்கழக வேந்தரும் தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

கல்லூரிகளில் நல்ல பேராசிரியர்கள், திறமையான மாணவர்கள் இருந்தும் தரவரிசையில் மாநிலம் பின்தங்கி உள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கழிப்பறைகள், வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் விடுதி வசதிகள் போன்ற முறையான உள்கட்ட அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஜி-20 மற்றும் யூத்-20 மாநாடுகளில் மாணவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக வேண்டும்.

மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதுமையை கொண்டு வர வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

இனிமேல் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிறந்த நடைமுறைகள் கொண்டுவரப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி செயல்பாடுகளுக்கும் விருது வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களின் நலனுக்காக ஆன்லைனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News