இந்தியா
சத் பூஜையில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து: 30 பேர் காயம்- பலர் கவலைக்கிடம்
- தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்காக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து, தீ காயங்களுடன் இருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.