இந்தியா
காஷ்மீரில் ஆயுதங்களுடன் பயங்கரவாதி கைது
- ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.
- அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டான்.
அவனது பெயர் பரீத் அகமது என்றும் தோடா மாவட்டம் கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ்காரர்களை தாக்குவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் உத்தரவிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சரியான நேரத்தில் பயங்கரவாதிகளை பிடித்ததால் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
அவனிடம் இருந்து ஒரு சீன துப்பாக்கி, 17 தோட்டாக்கள் வெடி மருந்துகள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.