வங்கதேசம் கைது செய்த இந்து சாமியாரின் வழக்கறிஞரை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்
- மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வங்கதேச இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ்-இன் வழக்கறிஞர் ரபிந்திரா கோஷ்-ஐ திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷ் நேரில் சந்தித்தார். மேற்கு வங்க மாநிலத்தின் பரக்னாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் ரபிந்திர கோஷ் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியா வந்தார்.
தற்போது இவர் பராக்பூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்தியா வந்துள்ள ரிந்திர கோஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் பராக்பூரில் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர் ரபிந்திர கோஷ் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரபிந்திர கோஷ்-இன் விருப்பம் பற்றி முதல்வர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பதாக குனால் கோஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர மத்தியில் உள்ள அரசு அதன் அலுவலகங்களை பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.