இந்தியா

ஞானேஷ் குமார் நியமனத்திற்கு எதிர்ப்பு: அமித் ஷாவை புதிய தேர்தல் ஆணையர் என அழைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

Published On 2025-02-18 21:49 IST   |   Update On 2025-02-18 21:49:00 IST
  • புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள்.
  • தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்துள்ளார். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகேத் கோகாலே கூறுகையில் "இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள். உங்கள் திறமையான தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும் என நாடு நம்பிக்கை கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News