மம்முட்டிக்காக சபரிமலை சென்ற விவகாரம் - மோகன்லால் குற்றச்சாட்டுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்
- நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
- நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.