இந்தியா
இந்தியாவில் முதல் மாநிலம் - உத்தரகாண்டில் இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்
- பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
- வலைதளத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று (ஜனவரி 27) உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வலைதளத்தை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இன்று இச்சட்டம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.