இந்தியா

புதிய தேசிய கல்வி கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்

Published On 2024-09-09 12:14 GMT   |   Update On 2024-09-09 12:14 GMT
  • தமிழ் உள்பட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கீறர்களா?
  • தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா ?

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு இணங்க மறுத்ததால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை தர மறுப்பதா ? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கு வகையில், "அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ் உள்பட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கீறர்களா ? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா ?

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா ?

தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான, எதிர்காலம் மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா ?

அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News