இந்தியா
உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஜனவரி 27 முதல் அமலுக்கு வருகிறது
- பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.
- உத்தரகாண்டில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.
டேராடூன்:
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்கு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.
அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.
பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என தெரிவித்தார்.