ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய விளக்கம் அளித்த அமித்ஷா
- ஓட்டுகளை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்றார்.
- பிப்ரவரி 8-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என்றார் அமித்ஷா.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு பிப்ரவரி 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், டெல்லியின் நரேலா சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டெல்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர்.
ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடைபெறுகிறது.
டெல்லியில் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுகளைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது.
ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும்.
கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.க. தலைமைக்கு வருகிறது என தெரிவித்தார்.