இந்தியா

VIDEO: குழந்தையுடன் கண்ணாமூச்சி விளையாடும் நாய்

Published On 2025-03-20 07:58 IST   |   Update On 2025-03-20 07:58:00 IST
  • வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
  • குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது.

குழந்தையுடன், நாய் கண்ணாமூச்சி ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. நடைபழகிய சுமார் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்கள் வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.

குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது. அப்போது நாய் ஒரு அறையின் வழியாகச் சென்று சுற்றி, மறுவழியாக வந்து விளையாடுகிறது. குழந்தை அந்த வழியில் சுற்றி வரும் முன்பாக எதிர்திசையிலும் ஓடி விளையாட்டு காட்டும் நாய், குழந்தையுடன் அருமையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி மகிழ்கிறது.

குழந்தையும் சந்தோஷமாக சிரித்தபடி அங்கும் இங்குமாக நடந்தபடி நாயுடன் விளையாடுகிறது. இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட, அந்த காட்சிகள் 6 நாட்களில் சுமார் 1 கோடியே 44 லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.



Tags:    

Similar News