இந்தியா

அமைதி காக்கவும்: மேற்கு வங்காள மாநில மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

Published On 2024-08-05 18:04 IST   |   Update On 2024-08-05 18:04:00 IST
  • எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்.
  • இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதனால் இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லண்டன் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி "வங்காள மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும். மேலும் மேற்கு வங்காள மாநிலத்திலேயே அல்லது நாட்டிலோ அமைதியை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். சில பாஜக தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். அதை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News