பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய சிறைத்துறை மந்திரி ராஜினாமா.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?
- வனத்துறை அதிகாரி மனிஷா சாகு என்பவரை உள்ளூர் மக்களுக்கு மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ வெளியானது
- அகில் கிரிக்கு அவரது சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.
திரிணாமுல் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க சிறைத்துறை அமைச்சர் அகில் கிரி, பெண் வனத்துறை அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், தாஜ்பூர் பகுதியில் வனத்துறை அதிகாரியாக உள்ள மனிஷா சாகு என்பவரை உள்ளூர் மக்களுக்கு மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியும், கட்டையால் அடிப்பேன் என்றும், பதவியை பறிப்பேன் என்றும் மிரட்டல் விடுப்பது பதிவாகியுள்ளது.
முன்னதாக தாஜ்பூர் கடற்கரையை ஒட்டிய வனத்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை மனிஷாவின் குழுவினர் அகற்றியதே அமைச்சரின் இந்த கோபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அகில் கிரிக்கு அவரது சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.
முதலமைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அகில் மன்னப்பு கேட்ட வேண்டும் இலையென்றால் உடனே பதவி விலகும்படி வலியுறுத்தியது. எனவே தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட மறுத்துள்ள அகில் கிரி, சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தற்போது ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அகில் கிரியை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் தோற்றம் குறித்து பேசி அகில் கிரி சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது