முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய இளம்பெண்
- ‘ஆன்-லைன்’ மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
- பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குருகிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.
அதன்படி 'ஆன்-லைன்' மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை 'கேஷ்-ஆன் டெலிவரி' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு வினியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றனர். அங்கிருந்த பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், காதலர் தினத்தன்று இப்படி ஒரு பரிசை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர், காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டனர்.