இந்தியா
VIDEO: 13-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர்
- 13 மாடி கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது.
- இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 13 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தானேவில் உள்ள 13 மாடி கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர். உடனே கீழே இருந்த பாவேஷ் மத்ரே என்ற நபர் ஓடிச்சென்று குழந்தையை பிடிக்க முயன்றார். அவரது கையில் பட்டு பின்னர் குழந்தை தரையில் விழுந்தது. இதனால் குழந்தைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாவேஷ் மத்ரே, "நான் கிரிக்கெட் விளையாடுவதால் எனக்கு பந்தை பிடிக்கும் பழக்கம் உள்ளது, அதுதான் குழந்தை கீழே விழுந்ததைக் கண்டதும் உடனடியாக விரைந்து சென்று காப்பாற்ற உதவியது" என்று தெரிவித்தார்.