செய்திகள்

ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழா: புத்தம் புதிய டீசல் இன்ஜின் கொண்ட ஹோன்டா சிவிக் அறிமுகம்

Published On 2017-09-14 15:58 IST   |   Update On 2017-09-14 15:58:00 IST
பத்தாவது தலைமுறை ஹோன்டா சிவிக் புத்தம் புதிய டீசல் இன்ஜின் கொண்ட மாடல் தற்சமயம் நடைபெற்று வரும் ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவிக் புத்தம் புதிய டீசல் இன்ஜின் கொண்ட மாடல் தற்சமயம் நடைபெற்று வரும் ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய சிவிக் 1.6 லிட்டர் i-DTEc இன்ஜின் கொண்டிருக்கிறது.

மார்ச் 2018-ம் ஆண்டு வாக்கில் புதிய டீசல் இன்ஜின் கொண்ட ஹோன்டா சிவிக் வெளியிடப்படுகிறது. புதிய இன்ஜின் 118 bhp மற்றும் 300 Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. ஹோன்டா சிவிக் லிட்டருக்கு 26 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்றும் இதன் அப்கிரேடுகளில் அதிக உறுதியன பிஸ்டன் மற்றும் குறைந்த ஃப்ரிக்ஷன் சிலிண்டர் போர்செப் கொண்டிருக்கிறது.

புதிய இன்ஜின் கொண்ட ஹோன்டா சிவிக் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 10.4 நொடிகளில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த செடான் மாடல் 9-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. டூ-வீல் டிரைவ் கொண்ட காரில் முதல் முறையாக ஹோன்டா நிறுவனம் டிரான்ஸ்மிஷன் வழங்கியுள்ளது.

முன்னதாக ஹோன்டா CR-V ஆல்-வீல் டிரைவ் மாடலில் டிரான்ஸ்மிஷன் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய டீசல் இன்ஜின் கொண்ட ஹோன்டா சிவிக் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Similar News