செய்திகள்
பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட்டுகளே தோல்விக்கு காரணம்: ஹோல்டர் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்களின் சில மோசமான ஷாட்டுகளே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 32.3 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணி ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துக்கு 7 விக்கெட்டுக்களை வாரி வழங்கியது.
ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும்தான் இழந்திருந்தது. அதன்பின் நாதன் லயன் மற்றும் ஆடம் சம்பா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுக்களை சரித்துவிட்டனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா வார்னரின் அரை சதத்தால் 25.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மோசமான தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டல் கூறுகையில் ‘‘பேட்டிங் செய்யும்போது நீங்கள் அவுட்டாகி வெளியேறினால், நல்ல முறையில் வெளியேற வேண்டும். அதாவது கடினமான பந்தில் அவட்டாகி வெளியேற வேண்டும்.
ஆஸ்திரேலியா எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து கடும் சவாலாக இருந்தனர். ஆனால், அவர்கள் எங்களுக்கு கவரக்கூடிய பந்துகளை வீசி அவுட்டாக்கினார்கள் என்று நான் நினைக்கவில்லை. முக்கியமான கட்டத்தில் நாங்கள் சில மோசமான ஷாட்டுகளை ஆடிவிட்டோம். அதற்கு விலையாக எங்கள் விக்கெட்டுக்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவி்ட்டது.
நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஸ்கோர் மோதுமானதல்ல. நாங்கள் சிறப்பான முறையில் பந்து வீச முயற்சி செய்த போதிலும், பந்து வீச்சாளர்களால் எந்தவொரு ஜாலத்தையும் நிகழ்த்த முடியவில்லை. இருந்தாலும் அஸ்திரேலியாவின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினோம். நரைன் முதலில் பந்து வீசி அவருடைய வேலையை சிறப்பாக செய்து முடித்தார் என்று நினைக்கிறேன். அதேபோல் நாங்கள் சில விக்கெட்டுக்களை வீழ்த்தினோம்’’ என்றார்.
சுனில் நரைன் 10 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.