செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

Published On 2016-08-28 15:04 IST   |   Update On 2016-08-28 15:04:00 IST
இந்த ஆண்டில் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை தொடங்குகிறது.
நியூயார்க்:

இந்த ஆண்டில் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை தொடங்குகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 13-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.

ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோனிக் (கனடா), நிஷிகோரி (ஜப்பான்) போன்ற முன்னணி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

‘நம்பர் 1’ வீராங்கனையும், 22-வது கிராண்ட்சிலாம் பட்டங்கள் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஒபன், பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றார்.

விம்பிள்டன் பட்டத்தை வென்றார். தற்போது அவர் ஸ்டெபி கிராப்புடன் இணைந்து 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால் ஸ்டெபிகிராப்பை முந்துவார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோற்று இருந்தார்.

கெர்பர் (ஜெர்மனி), முருகுசா (ஸ்பெயின்), ரட்வன்ஸ்கா (போலந்து), ஹால்ப் (ருமேனியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), வின்சி (இத்தாலி) போன்ற வீராங்கனைகளும் சவால் அளிக்க கூடியவர்கள்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா செக் குடியரசு வீராங்கனை பார்போரா ஸ்ரைகோவாவுடன் களம் இறங்குகிறார்.

இந்திய வீரர் சகெத் மைனெனி அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியுடன் மோதுகிறார்.

Similar News