செய்திகள்

பெனால்டி வாய்ப்பு கொடுத்த விஏஆர் டெக்னாலஜியை பாராட்டிய கிரிஸ்மான்

Published On 2018-06-17 18:56 IST   |   Update On 2018-06-17 18:56:00 IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் விஏஆர் டெக்னாலாஜி மூலம் பெனால்டி வாய்ப்பு கிடைத்ததால், கிரிஸ்மான் அதை பாராட்டியுள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தின்போது பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பந்தை கோல் எல்லையை நோக்கி கொண்டு சென்றார். அப்போது கோல் எல்லைக்குள் வைத்து ஆஸ்திரேலிய வீரர் கிரிஸ்மானை தள்ளிவிட்டார்.

பிரான்ஸ் வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கேட்டனர். ஆனால், மைதான நடுவர் பெனால்டி கொடுக்கவில்லை. அதன்பின் VAR என்ற வீடியோ அசிஸ்டென்ட் ரெப்ரீ டெக்னாலஜி உதவியை நடுவர் கேட்டார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் செய்தது தவறு என்பது தெரிந்து, பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கிரிஸ்மான் கோல் அடித்தார்.



இதனால் VAR தனது வேலையை சரியாக செய்தது என்று கிரிஸ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து கிரிஸ்மான் கூறுகையில் ‘‘என்னுடைய முறையீட்டில் VAR தனது வேலையை சரியாக செய்தது. ஆஸ்திரேலிய வீரர் என்னுடைய இடது காலில் குறுக்கீட்டார். இதனால் பெனால்டி என்று நினைத்தேன். நான் எழுந்த பிறகு, எனக்கு சற்று வலியை கொடுத்தது. நான் கீழே விழுந்தது உருவகப்படுத்தியது கிடையாது.

எனக்கும் அணிக்கும் சிறந்த ஆட்டமாக அமையவில்லை. இருந்தாலும், வெற்றியோடு திரும்பியது முக்கியமான விஷயம். 
Tags:    

Similar News