செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து- காலிறுதியில் தோல்வியடைந்ததால் ரஷியா வீரர் ஓய்வு

Published On 2018-07-08 15:54 IST   |   Update On 2018-07-08 15:54:00 IST
காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரஷியா அணியின் மூத்த வீரரான இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு. #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலை பெற்றிருந்ததால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷியா 3-4 எனத் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.



இந்த தோல்வியில் இந்த அணியின் 38 வயதான டிபென்ஸ் வீரர் செர்கெய் இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இவர் ரஷியா அணிக்காக 127 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News