என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.

    சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • மீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார்.
    • பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு தெரியாது இந்த பிரேக் அவரது வாழ்க்கையை மாற்றப் போகும் தருணம் என்று.

    இஷான் கிஷன் இந்திய அணிக்கு கடைசியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலயாவை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.

    அதற்கு பிறகு நடைபெற்ற ரஞ்சி டிராபியிலும் இஷான் விளையாட மறுத்தார். இதனால் பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் மறுபடியும் விளையாட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடினால் மட்டுமே அவரால் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் என கூறியுள்ளார்.

    இது குறித்து சமீபத்தில் இஷான் கிஷன் அளித்த பேட்டியில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சரியான மனநிலையில் நான் இல்லை. தொடர்ந்து நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாம். இப்போது வருத்தமாகத் தான் உள்ளது." என்று கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவர் நினைத்ததுப் போல் விளையாட முடியவில்லை. இதனால் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

    • தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது.
    • இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியாவில் சுற்றுப் பணம் மேற்கொண்டுள்ள மகளிர் தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், நேற்றிரவு 2வது டி20 போட்டி நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் ஆன்னி போஸ்ச் முறையே 52 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.

     


    இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் முதல் பாதி முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

    • துஷார் ரஹேஜா 81 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது.

    இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக துஷார் ரஹேஜா- ராதாகிருஷ்ணன் களமிறங்கினர். இதில் ராதாகிருஷ்ணன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாத்விக் 12, விஜய் சங்கர் 16, பாலசந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து துஷார் ரஹேஜா- முகமது அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

    எளிதாக வெற்றியை உறுதி செய்யும் அளவில் விளையாடிய நிலையில் 35 ரன்னில் முகமது அலியும் 81 ரன்னிலும் துஷார் ரஹேஜாவும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    முதல் இரு செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய ஹம்பர்ட் 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டை அல்காரஸ் வென்றார்.

    இறுதியில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்களை எடுத்தது.

    சென்னை:

    தென் ஆப்பிரிக்க மகளிர் அணி சென்னையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தஸ்மின் பிரிட்ஸ் 52 ரன்னும், ஆன்னி போஸ்ச் 40 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • முதலில் ஆடிய கோவை 160 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதையடுத்து சுதாரித்த மேடிசன் கீஸ் 7-6 (8-6) என போராடி கைப்பற்றினார்.

    3வது செட்டில் இருவரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் இருக்கும்போது மேடிசன் கீஸ் விலகினார். இதனால் பவுலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    • முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய நெல்லை அணி 168 ரன்களை எடுத்து வென்றது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார்.

    நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அருண் கார்த்திக் 10 ரன்னில் அவுட்டானார்.

    அஜிதேஷ் குருசாமி அதிரடியாக ஆடி 14 பந்தில் 30 ரன் எடுத்தார். அருண்குமார் 6 ரன்னிலும், சோனு யாதவ் 1 ரன்னிலும், ஈஸ்வரன் 9 ரன்னிலும், கிருபாகர் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மோகித் ஹரிஹரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசியில் அதிரடியாக ஆடிய ராஜகோபால் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் நெல்லை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய இந்தியா 234 ரன்களை குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

     அடுத்து கெய்க்வாட்டுடன் ரிங்கு சிங் இணைந்தார். ருத்ராஜ் அரை சதம் கடந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    • அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
    • எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.

    ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.

    எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி  எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

    ×