விளையாட்டு

டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா

Published On 2025-02-02 23:28 IST   |   Update On 2025-02-02 23:28:00 IST
  • இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
  • அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார்.

மும்பை:

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா செய்த சாதனைகள்:-


அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.


இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா. இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.

அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.

Tags:    

Similar News