சிக்சர் மழையில் நனைந்த வான்கடே: அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தல்
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.