இந்திய அணியுடன் பயணிக்க கவுதம் கம்பீர் உதவியாளருக்கு தடை விதித்த பிசிசிஐ
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பல்வேறு விதிகளை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
- அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்பட பல்வேறு விதிகளை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் வெளியிட்டது.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் உதவியாளரான கவுதம் அரோராவுக்கு இந்திய அணியுடன் பயணம் செய்வதற்கு பி.சி.சி.ஐ. தடை விதித்தது.
வீரர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்கள் மட்டும் செல்லக்கூடிய இடங்களுக்கு அவரும் சென்று வருகிறார் என இந்திய அணி உறுப்பினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.