ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் தெ.ஆ. அணி முதலில் பேட்டிங்
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளையும், சூப்பர் 6 சுற்றில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை இந்திய அணி பந்தாடியது.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.