கிரிக்கெட் (Cricket)

விராட் கோலியால் ரஞ்சி கோப்பைக்கு பெருமையா? - ரசிகரை விமர்சித்த அஸ்வின்

Published On 2025-02-02 15:17 IST   |   Update On 2025-02-02 15:17:00 IST
  • ரஞ்சிக் கோப்பையின் வரலாறு அவருக்கு தெரியுமா?
  • கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமில்லை, வீரர்களுக்கு கிரிக்கெட்தான் முக்கியம்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சமீப காலங்களில் ஃபார்ம்-அவுட் ஆகி தவிக்கும் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதன் காரணமாக பிசிசிஐ-ன் வலியுறுத்தலின்படி ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடினார்.

டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடும் போட்டியை காண எண்ணற்ற ரசிகர்கள் திரண்டனர். இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி போட்டியில் கோலி விளையாடியதை குறிப்பிடும் விதமாக 'Ranji Trophy is blessed' என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலியைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். ஒவ்வொரு ரஞ்சிக் கோப்பை போட்டிக்கும் இதுபோன்ற கூட்டம் இருக்க வேண்டும். ஹிமான்ஷூ சங்வான் அபாரமான பந்தை வீசி கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

'ரஞ்சி டிராபி ஆசீர்வதிக்கப்பட்டது' என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். ரஞ்சிக் கோப்பையின் வரலாறு அவருக்கு தெரியுமா? இத்தனை வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் முக்கியமான தொடராக இருந்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், எப்போதும் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வந்தார். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் வீரர்கள் பயனடைவார்கள். கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமில்லை, வீரர்களுக்கு கிரிக்கெட்தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News