கிரிக்கெட் (Cricket)

A Lion Is Always Lion.. 55 வயதிலும் அந்தரத்தில் பறந்த ஜான்டி ரோட்ஸ்- வைரலாகும் வீடியோ

Published On 2025-03-08 10:43 IST   |   Update On 2025-03-08 10:43:00 IST
  • சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணி நேற்று மோதினர்.
  • இதில் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வதோதரா:

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஜாக் காலிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தொடக்கம் முதலே அதிரடியில் பட்டையை கிளப்பியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

பின்னர் 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா 30 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் பென் லாப்லின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது வாட்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் ஷபலாலா வீசிய பந்தை லாங் ஆப் திசையில் அடித்தார். அந்த திசையில் இருந்த பீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பறந்து வந்து அந்த பந்தை தடுத்தார். 55 வயதில் இவர் இப்படி பீல்டிங் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1992-ம் ஆண்டு ஜான்டி ரோட்ஸ் அறிமுகமானார். இவரது சிறந்த பீல்டிங்கால் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அந்தரத்தில் பறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் அடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது பீல்டிங்கால் உலகின் சிறந்த பீல்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதன் பிறகு யாரு சிறந்த பீல்டிங் செய்தாலும் ஜான்டி ரோட்ஸ் மாதிரி பீல்டிங் செய்வதாக கூறப்பட்டு வந்தது. அந்த அளவுக்கு அவரது பீல்டிங் பேசப்பட்டது.

Tags:    

Similar News