கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2025-03-09 22:48 IST   |   Update On 2025-03-09 22:48:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக இந்தியா கைப்பற்றியது.
  • சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை:

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள். சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News