ஓய்வு பெறுகிறாரா ஜடேஜா?.. கட்டியணைத்து பாராட்டிய விராட் கோலி
- 10 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
- ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது.
இப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றவுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.