கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து 101/3

Published On 2025-03-09 16:12 IST   |   Update On 2025-03-09 16:12:00 IST
  • இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார்.
  • 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்

சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.

இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. டாம் லாதாம் - மிட்செல் ஜோடி தற்போது நிதானமாக விளையாடி வருகின்றனர்.

Tags:    

Similar News