வருண் சூழலில் சிக்கிய வில் யங்.. ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சனை தூக்கிய குல்தீப்
- வில் யங் - ரச்சின் ரவீந்திரா ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
- ரச்சின் ரவீந்திராவை விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இதனை எதிர்த்து ரவீந்திரா முறையீடு செய்ய 3 ஆவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
உடனடியாக அடுத்த பந்தை ரவீந்திரா தூக்கி அடித்தார். இந்த கடினமான கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயஸ் தவறவிட்டார். ஒரே ஓவரில் 2 முறை தாவீந்திரா தப்பித்தார். ஆனால் அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக வில் யங் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப், வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். தற்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.