கிரிக்கெட் (Cricket)
null

சாம்பியன்ஸ் டிராபி வெற்றி: கையில் ஸ்டம்ப்களுடன் நடனமாடிய ரோகித் - விராட்.. வீடியோ வைரல்

Published On 2025-03-10 08:57 IST   |   Update On 2025-03-10 11:01:00 IST
  • இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
  • ஒரு போட்டியில்கூட தோல்வி இன்றி கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தன்வசப்படுத்தியது. இதுவரை எந்த அணியும் மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியை வெல்லாத நிலையில், இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இறுதிப் போட்டியில் வெற்றிக் கண்ட இந்திய அணியினரும் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியை களத்தில் கொண்டாடித் தீர்த்தனர். கோப்பையுடன் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வீரர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் கொண்டாடினர்.

அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் களத்தில் ஸ்டம்ப்களை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினர். இருவரும் ஸ்டம்ப்களை வைத்துக் கொண்டு தாண்டியா போன்று நடனம் ஆட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

மேலும், ரோகித் - விராட் நடன வீடியோ சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் தாண்டியா ஆடுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் அவற்றில் வாழ்த்து செய்திகளை கமெண்ட்களாக பதிவிட்டனர். 



Tags:    

Similar News